உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பண்ணை பள்ளி  பயிற்சி வகுப்பு

 பண்ணை பள்ளி  பயிற்சி வகுப்பு

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கூடலுாரில் 'அட்மா' திட்டத்தில், நெற்பயிர்களில் பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு நடந்தது. விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, நெல் பயிர்களின் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து, பெண்ணாடம் வேளாண்மை விரிவாக்க மைய துணை வேளாண் அலுவலர் இளங்கோவன் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய இடுபொருட்கள், வேளாண்மை அடுக்ககம் குறித்தும்; உதவி வேளாண்மை அலுவலர் கவிதா உயிர் உரம், இயற்கை பூச்சி விரட்டி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சரவணன், குமரேசன், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !