கார் மோதி விவசாயி பலி
காட்டுமன்னார்கோவில்: பைக்கில் சென்ற விவசாயி, கார் மோதி இறந்தார். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த சர்வராஜன்பேட்டையை சேர்ந்தவர் பொற்செழியன், 52; விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் செல்வம், 40; இருவரும் வயலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை செல்வம் ஓட்டினார். காட்டுமன்னார்கோவில் பைபாஸ் சாலையில் எள்ளேரி பாலம் அருகில் வந்தபோது, அவ்வழியாக வந்த கார், பைக் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த இருவரும் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, பொற்செழியன் உயிரிழந்தார். செல்வத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.