உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பன்னீர் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைகிறது

பன்னீர் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைகிறது

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்கான பன்னீர் கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருகிறது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரிக்கரை கிராமங்களான வெய்யலுார், வாழைக்கொல்லை, வெள்ளியக்குடி, வடப்பாக்கம், ஓடாக்கநல்லுார் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் 500 ஏக்கர் வரை பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டன. தற்போதை நிலையில், கரும்பு நடவு செய்ய விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவும், கரும்பு வளரும்போது சோலை கழித்தல், களையெடுத்த மண் அணைத்தல் என 20 ஆயிரம் வரை செலவும் ஆகிறது. வேளாண்துறை பயிர் வகை பட்டியலில் பன்னீர் கரும்பு சாகுபடி பட்டியலில் இல்லாததால் இயற்கை பேரிடரில் பாதிப்பிற்குள்ளாகும்போது அரசிடம் கரும்புகளுக்கான இழப்பீடுகளை பெறமுடியாமல் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது ஒரு புறமிக்க பொங்கல் பண்டிகையன்று இடைத் தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கரும்பபை கொள்முதல் செய்வதால் விவசாயிகள் கவலையடைகின்றனர். இழப்பீடு கிடைக்காதது, இடைத்தரகர்கள் தலையீடு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் மத்தியில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்வது படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது, ஒவ்வொரு கிராமங்களிலும் சுமார் 50 முதல் 80 ஏக்கர் வரை மட்டுமே விவசாயிகள் வைகாசி பட்டத்தில் பன்னீர் கரும்பு நடவு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ