உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொள்முதல் நிலையத்ததை மாற்ற எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

கொள்முதல் நிலையத்ததை மாற்ற எதிர்ப்பு: விவசாயிகள் போராட்டம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே பாளையங்கோட்டை கீழ்பாதியில், இயங்கி வந்த அரசு நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கீழ்பாதியில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வந்துள்ளது. தற்போது அதே இடத்தில் கொள்முதல் நிலையம் திறக்க ஏற்பாடுகள் நடந்தது. இந்நிலையில், அந்த கொள்முதல் நிலையத்தை அங்குள்ள நீர் பிடிப்பு ஏரியில் இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் நேற்று காலை 11.00 மணியளவில் ஒன்று திரண்டு நெல்கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகள் யாரும் வராத நிலையில் மதியம் 1.00 மணியளவில் தாங்களாகவே கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ