உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டமைப்பு துவக்க விழா 

கூட்டமைப்பு துவக்க விழா 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த அறந்தாங்கியில் தனித்து வாழும் பெண்களுக்கான கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. மாவட்ட ஸ்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசுந்தரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்டினா வரவேற்றார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஏசுராணி பால்ராஜ் வாழ்த்திப் பேசினார். தனித்து வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறகுகள் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செல்வடான்ஸி மேரி, விண்ணரசி. ஜென்மசோபியாமேரி, ராசாத்தி பேசினர். தனித்து வாழும் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதில் அரசின் பங்கு குறித்து சோழதரம் சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா, இந்தியன் வங்கி கடலுார் மண்டல நிதிசார் ஆலோசகர் செல்வராஜ், வழக்கறிஞர் பூங்கொடி ஜவர்ஹர்லால் பேசினர். தொடர்ந்து, பாஸ்டினா கல்வி அறங்கட்டளை நிறுவனர் சேவியர் பெர்னாண்டஸ் பேசினார். ஒருங்கிணைப்பாளர் ராஜாஜி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !