உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார்: தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலுார் வெளிசெம்மண்டலம் பகுதியில் முறைகேடாக மணல் எடுத்தது குறித்து விளக்கம் கேட்கச் சென்ற, ஓய்வூதியர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் புருஷோத்தமனை தரக்குறைவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் பழனி, மாவட்ட தலைவர் காசிநாதன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பொருளாளர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை