மேலும் செய்திகள்
ராணுவ மையம் அருகே சண்டையிட்ட காட்டெருமைகள்
19-Nov-2024
பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் பெண் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட திருமலை அகரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகள் லதா, 48. கூலித் தொழிலாளி. திருமணமாகாமல் தனியாக வசிக்கிறார். இவரது வீட்டின் அருகே வயல் பகுதி உள்ளது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் தனது பசுமாட்டிற்கு தண்ணீர் வைக்க வந்தபோது, பின்னால் இருந்து வந்த காட்டுப்பன்றி அவரை திடீரென தாக்கியது. இதில், மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.லதா கூச்சலிட அருகிலுள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு பெண்ணாடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பெண் கூலித்தொழிலாளியை காட்டுப்பன்றி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19-Nov-2024