உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / படத்திறப்பு விழா; அமைச்சர்கள் பங்கேற்பு

படத்திறப்பு விழா; அமைச்சர்கள் பங்கேற்பு

மந்தாரக்குப்பம்; நெய்வேலி ஜெயப்பிரியா குழும இயக்குநர் கஸ்துாரி அம்மாள் கடந்த 13ம் தேதி இறந்தார். இவரது படத்திறப்பு விழா நெய்வேலி கஸ்துாரி திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, படத்தை திறந்து வைத்து, மரியாதை செலுத்தினார்.ஜெயப்பிரியா குழும நிறுவனர் மற்றும் தலைவர் ராசகோபாலன் மற்றும் ஜெயப்பிரியா நிர்வாக இயக்குநர் ஜெயசங்கர் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர், சபாராஜேந்திரன் எம்.எல்.ஏ., பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ராயர், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முன்னாள் காங்.,தலைவர் அழகிரி, தே.மு.தி.க., மாநில துணை பொதுசெயலாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், கலைசெல்வன், முத்துகுமார், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராமலிங்கம், வழக்கறிஞர் சிவமணி, கெங்கைகொண்டான் பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ், நகர செயலாளர் பக்தவச்சலம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் தீனதாயளன், மாநில போக்குவரத்து சங்க நிர்வாகி தண்டபாணி, அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள், ஜெயப்பிரியா குழும அலுவலக ஊழியர்கள், மேலாளர்கள், பள்ளி கல்வி குழும ஆசிரியர்கள் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ