உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இறுதி சுற்று தடகள போட்டி

பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இறுதி சுற்று தடகள போட்டி

சிதம்பரம் ; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கிடையேயான இறுதிசுற்று தடகள போட்டிகள் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், தமிழக முழுதும் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள இறுதி போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. இன்டர் பாலிடெக்னிக் அத்லெடிக் அசோசிஷேன் தலைவர் ஜான்லுாயிஸ் தலைமை தாங்கினார். பல்கலைகழக பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ் சிறப்பு விருந்திராக பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தார். விளையாட்டு துறை தலைவர் ராஜசேகரன் வாழ்த்திப் பேசினார். ஏற்பாடுகளை வலங்கைமான் தொழில்நுட்ப அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் அகஸ்டின் ஞானராஜ் மற்றும் கல்லுாரி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.போட்டியில் 107 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் இருந்து 800 க்கும் மேற்பட்ட தடகள வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். இறுதி போட்டி நாளை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை