மேலும் செய்திகள்
சிறையில் இருக்கும் சங்கர் மீது புதிய வழக்கு
19-Dec-2024 | 2
புதுச்சேரி,: புதுச்சேரி, கோரிமேடு பகுதியில் கடந்த 2022ம் ஆண்டு விபசாரம் நடத்திய புரோக்கர் கைது செய்யப்பட்டு, 2 பெண்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்களின் வயது பரிசோதனையில் ஒருவர், 17 வயது சிறுமி என தெரிய வந்தது.விபசார புரோக்கருக்கு கூகுள் பே வாயிலாக பணம் செலுத்தி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 27 பேர் மீது வழக்கு பதிந்து, 24 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சிக்கிய சிறுமியின் விபரங்கள் வெளியாயின.கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் அடையாளங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வில்லியனுார் கணுவாப்பேட்டை, புதுநகரை சேர்ந்த ஜெயகாந்தன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சுமதி, வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ஜெயகாந்தனுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.ஜெயகாந்தன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் பல்நோக்கு ஊழியர்.
19-Dec-2024 | 2