உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம்: ஜூலை 3-: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், விருத்தாசலம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். பேராசிரியர் பரமசிவம் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து போன்ற பேரிடர் காலங்களில் தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை