உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கெடிலம் ஆற்றில் மீன்கள் இறப்பு

கெடிலம் ஆற்றில் மீன்கள் இறப்பு

கடலுார் : கடலுார் அருகே கெடிலம் ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால், பரபரப்பு நிலவியது. கடலுார் கம்மியம்பேட்டை அருகே கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகே நேற்று மீன்கள் செத்து மிதந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. ஆற்று நீரில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீர்வளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி