மீன்கள் வரத்து குறைவு விலை கிடு கிடு
கடலுார் : கடலுார் துறைமுகத்தில் வரத்து குறைவால், மீன்கள் விலை கிடு கிடு வென, உயர்ந்தது. கடலுார் துறைமுகத்தில் நேற்று, ஆடிப்பெருக்கு, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவப் பிரியர்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். மீன்கள் வரத்து குறைவு காரணமாக விலை கிடு கிடு உயர்ந்தது. வஞ்சிரம் மீன் கிலோ 1,100, கனவா 250, இறால் 500, பால் சுறா 1,000, ஷீலா 450, நெத்திலி 250 என அனைத்து வகை மீன்களின் விலையும் அதிகளவில் காணப்பட்ன. ஆடிப்பெருக்கில் அசைவம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, அசைவப் பிரியர்கள் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை ஆர்வமாக வாங்கிச்சென்றனர். துறைமுகம், கடலுார் முதுநகர் மீன்மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.