மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலுார்: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் நிறுவனத்தலைவர் மங்கையர் செல்வன் தலைமை தாங்கினார். அனைத்து மீனவர் கிராமத்தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் தங்க சேகர், துணை பொது செயலாளர்கள் சக்திவேல், ரமேஷ், பொருளாளர் திருமுகம், இணை பொது செயலாளர் வெங்கடேசன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மலையாளத்தான் உட்பட பலர் பங்கேற்றனர். இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை அரசுடன் அரசியல் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டும், மீனவர்களை படுகொலை செய்த இலங்கை ஆட்சியாளர்கள் மீது பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.