உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சைபர் கிரைம் குற்றவாளிகள் ஐந்து பேர் கைது

சைபர் கிரைம் குற்றவாளிகள் ஐந்து பேர் கைது

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஆபரேஷன் திரை நீக்கு 2.0 வின் கீழ், சைபர் கிரைம் குற்றவாளிகள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.இணைய வழி குற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆபரேஷன் திரைநீக்கு 2.0 வின் கீழ், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட சைபர் கிரைம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 11பேரை போலீசார் கைது செய்து சம்மந்தப்பட்ட மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி கடலுார் மாவட்ட வழக்குகளில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த ஷானுதீன்,45, இம்தியாஸ்,25, சையத் ரகுமான்,42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில் கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !