மாரியம்மன் கோவில் கொடியேற்றம்
சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் காப்பு கட்டி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவில், பாண்டியன் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.தினசரி அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம், 27ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. 28ம் தேதி காலை 5:00 மணிக்கு அங்கபிரதட்சணம், 9:00 மணிக்கு தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல், 2:00 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 29ம் தேதி விடையாற்றி உற்சவம், 30ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிகழ்ச்சி முடிவடைகிறது.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.