உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

கடலுார்: கடலுார் புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் புதுவண்டிப்பாளையத்தில் உள்ள சிவசுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் காலை விநாயகர் பூஜையுடன் துவங்கி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின் மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதியுலா, புற்றுமண் வழிபாடு நடந்தது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. இரவு சுவாமி விமானத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 26ம் தேதி, சக்திவேல் பெறும் விழா, 27ம் தேதி காலை 6மணிக்கு வீரபாகு தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 7.30மணிக்கு சஷ்டி மகாபிஷேகம், இரவு வீரபாகு துாது, சிங்கமுகன் வதம், கம்பத்துப்பாடலை தொடர்ந்து 9மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும் 28ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 29ம் தேதி சுவாமி விடையாற்றி உற்சவம், சுவாமி வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை