உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெள்ள பாதிப்பு பணி; கலெக்டர் பாராட்டு

வெள்ள பாதிப்பு பணி; கலெக்டர் பாராட்டு

கடலுார்; வெள்ள பாதிப்பின்போது சிறப்பாக பணியாற்றிய, கடலுார் மாவட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழை, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், வீராணம் ஏரியில் உபரி நீர் திறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் உணவு, குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பணிகளில், ஒன்றிய அலுவலர்கள் ஈடுபட்டனர். சிறப்பாக பணி செய்த ஒன்றிய அலுவலர்களுக்கு பாராட்டு விழா கடலூரில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.கூடுதல் கலெக்டர் சரண்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கடலுார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் பார்த்திபன், வீரமணி, குமராட்சி பி.டி.ஓ., சிவகுருநாதன், சரவணன், காட்டுமன்னார்கோவில் பி.டி.ஓ., ஜெயக்குமாரி மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருக்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி