உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பம் : பருவநிலை மாற்றத்தால் மந்தாரக்குப்பம் பகுதியில் சளி, இருமல், காய்ச்சல், அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக குளிர்ந்த காற்று மற்றும் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் பருவநிலை மாற்றத்தால் மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பலருக்கு சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எனவே பேரூராட்சி, ஊராட்சி, கடைவீதி, நகரில் பல இடங்களில் குப்பைகளை அகற்றுதல், தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற்றுதல், கழிவுநீர் தேக்கம், மற்றும் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் சுகாதாரத் துறை சார்பில் நகரில் முக்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ