மேலும் செய்திகள்
ஸ்டார்ம் அகாடமி அணி தடகளத்தில் 'சாம்பியன்'
22-Feb-2026
கடலுார்: கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்கம் சார்பில், பஞ்சாபில் நடக்கும் மூத்தோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்போருக்கு நிதியுதவி அளிக்க தீர்மானிக்கப் பட்டது. கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்க மாதாந்திர கூட்டம், கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. சங்க துணைத்தலைவர் திருமலை தலைமை தாங்கினார். செயலாளர் சுபாஷ்பாபு வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம், நிர்வாகிகள் ராசமோகன், வைரமூர்த்தி, ரத்தினசபாபதி உட்பட பலர் பேசினர்.பஞ்சாபில் வரும் மார்ச்., 14,15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்க உள்ள மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகளில் கடலுார் மாவட்ட சங்கம் சார்பில் பங்கேற்போருக்கு நிதியதவி அளிக்க தீர்மானிக்கப்பட் டது. லவன் நன்றி கூறினார்.
22-Feb-2026