உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே கூடுதல் துணை மின் நிலைய கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் கிராமத்தில் கடந்த 2010ம் ஆண்டு 33/11 கிலோ வாட் துணை மின் நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 23 ஊராட்சிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது ஏற்படும் தொடர் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 110/33 கிலோ வாட் துணை மின் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி தரம் உயர்த்தப்பட்ட கூடுதல் மின் நிலைய கட்டுமானப் பணி நேற்று துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் வேல்முருகன் மற்றும் ஜெயபாண்டியன், ஆசிரியர் மனோகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ