மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ., வழங்கல்
30-Sep-2024
கடலுார்: கடலுார் அடுத்த மருதாடு ஊராட்சியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்கி பேசினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் நாராயணன் வரவேற்றார்.விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் மனோகர், முத்துக்குமாரசாமி, துணைத் தலைவர்கள் சன்மார்க்கம், சாந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர், பரத், வி.ஏ.ஓ., வேதவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர் சஞ்சய் நன்றி கூறினார்.
30-Sep-2024