உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  விலையில்லா பாட புத்தகம் வழங்கல்

 விலையில்லா பாட புத்தகம் வழங்கல்

கடலுார்: கடலுார் அடுத்த சுப்ரமணியபுரம் ராமலிங்கர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. கோ டை விடுமுறை முடிந்து கடலுார் அடுத்த சுப்ரமணியபுரம் ராமலிங்கர் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. பள்ளி செயலர் திருவடி, தலைமை தாங்கி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர். இப்பள்ளி முதன் முறையாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது என, பள்ளி நிர்வாகத்தினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி