உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விநாயகர்  சதுர்த்தி பந்தல் கால் நடுதல்

விநாயகர்  சதுர்த்தி பந்தல் கால் நடுதல்

மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் வெற்றி விநாயகர் கோவிலில் விநாயாகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா நடந்தது. மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புனிதநீர் கொண்டு மஞ்சள், சந்தனம் பூசப்பட்டு பந்தல்கால் நடும் விழா நடந்தது. வரும் 27ம் தேதி காலை கணபதி ேஹாமம், மகா கணபதி பிரதிஷ்டை மற்றும் வெள்ளி காப்பு அலங்காரம் நடக்கிறது. 28ம் தேதி சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை, 29ம் தேதி சிறப்பு பூஜை, சிறப்பு பட்டிமன்றம், 30ம் தேதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 31ம் தேதி 1,008 கொழுக்கட்டையுடன் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதான விருந்து, மாலை 6:00 மணிக்கு அலங்காரம், விநாயகர் வீதியுலா புறப்பட்டு, வடக்கு வெள்ளுர் காசி விஸ்வநாதர் திருக்கோவில் குளத்தில் விஜர்சனம் செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !