உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குப்பை வாகனம் சிறைபிடிப்பு

 குப்பை வாகனம் சிறைபிடிப்பு

கடலுார்: கடலுார் அடுத்த கோண்டூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், தென்பெண்ணையாறு கரையோரமாக கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. நேற்று மாசிலாமணி நகர் பூங்கா பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டது. இதைப்பார்த்த பொதுமக்கள், குப்பை கொட்டுவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, குப்பை வாகனத்தை சிறைப்பிடித்தனர். துணை பி.டி.ஓ.,லலிதா மற்றும் ஊராட்சி செயலாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்களுக்கு தொந்தரவில்லாமல் மாற்று இடத்தில் குப்பை கொட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர். அதையேற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ