உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  காஸ் கசிந்து தீ விபத்து 

 காஸ் கசிந்து தீ விபத்து 

புவனகிரி: கீரப்பாளையம் அருகே காஸ் கசிந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. புவனகிரி அருகே கீரப்பாளையம் ஏ.கே.ஆர். நகரைச் சேர்ந்த கஸ்துாரி, 65; வீட்டில் தனியாக வசித்து வருகிறார். காலியான தனது காஸ் சிலிண்டரை அகற்றிவிட்டு, புதிய சிலிண்டர் மாற்ற முயற்சித்தார். அப்போது, திடீரென காஸ் கசிந்தது. மின் விளக்கு ஆன் செய்தபோது, தீப்பொறி ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. கஸ்துாரி உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, தீப்பற்றி எரிந்த சிலிண்டரை வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் பிரிட்ஜ் உள்ளிட்ட எலட்ரிக் பொருட்கள் சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை