உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துளுவ வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

துளுவ வேளாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

கடலுார்: கடலுார் துளுவ வேளாளர் சங்கத்தின் 38ம் ஆண்டு விழா பொதுக்குழு கூட்டம் மற்றும் கல்வி பரிசளிப்பு விழா நடந்தது.கடலுாரில் நடந்த விழாவிற்கு, தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரபு, பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் பலரை சேர்ப் பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கல்வி அறக்கட்டளை தாய் சங்கத்துடன் இணைந்தது.அப்போது, துளுவ வேளாளர் கல்வி நலச்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை