முதுகலை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு
கடலுார்: கடலுார் சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது.கடலுார் மாவட்டத்தில், பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முதுகலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்டத்தில் காலியாக உள்ள 426 இடங்களுக்கு, 310 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வு நடைபெறுவதை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்கள் தேவமுரளி, பாட்ஷா, உதவியாளர்கள் ரவிச்சந்திரன், தேவராஜ் உடனிருந்தனர்.