மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
28-Mar-2026
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளியில் நடந்த வேதக்கணித தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லட்சுமி சோரடியா பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வேதக்கணித தேர்வு நடந்தது. அதில், 42 மாணவர்கள் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பிடித்தனர். 32 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தேர்வில் சிறப்பிடம் மற்றும் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா சான்றிதழ், பதக்கம் வழங்கி பாராட்டினார். தலைமைஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா, பத்தாகான், வேதக்கணித ஆசிரியை மாதவி, இளவரசி மற்றும் ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்.
28-Mar-2026