உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பன்றி பிடிக்கும் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

பன்றி பிடிக்கும் வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

கடலுார்: கடலுாரில் மாநகராட்சி சார்பில் பன்றிகளை பிடிக்கச்சென்ற வாகனத்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று வன்னி யர்பாளையத்தில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க ஊழியர்கள் வாகனத்தை எடுத்துச் சென்றனர். அந்த வாகனத்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு நிலவியது. அச்சமடைந்த ஊழியர்கள் கடலுார் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்ணாடியை உடைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை