உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் தங்க நகை திருட்டு

கடலுார் அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் தங்க நகை திருட்டு

கடலுார்; கடலுார் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். கடலுார் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த கொஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 70; இவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று கடலுார் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவிற்கு சிகிச்சைக்கு வந்தார். மூதாட்டி சிகிச்சைக்கு காத்திருக்கும் போது, மர்ம ஆசாமி ஒருவர், டாக்டரிடம் சென்று உடல் பரிசோதிக்கும் போது கழுத்தில் நகை அணிந்திருக்க கூடாது. அதனால் நீ கழுத்தில் போட்டிருக்கும் தங்க சங்கிலியை கழட்டிக்கொடு, வந்து வாங்கிக்கொள்ளலாம் என கூறி மூதாட்டியிடம் வாங்கினார். மூதாட்டி தனலட்சுமி டாக்டரிடம் சென்று திரும்பி வந்து பார்த்த போது, சங்கிலியை வாங்கிய நபர் மாயமானார். மர்ம நபரை புறநோயாளிகள் பிரிவு கட்டடம் முழுவதும் தேடி பார்த்தும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்து மூதாட்டி கதறி அழுதார். இதுனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அரசு மருத்துவமனை புற காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அதில் மூதாட்டி அணிந்திருந்தது 2 பவுன் தங்க செயின் எனத் தெரியவந்தது. போலீசார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டிவி., கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ