அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு
கடலுார் : கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடந்தது.சங்க மாவட்டத் தலைவர் விஜயக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஞானம் வரவேற்றார். மாநிலத் தலைவர் பச்சையப்பன் சங்க கொடி ஏற்றி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கார்மேகம் ஆண்டறிக்கை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தனர். ஆர்.டி.ஓ., அபிநயா, டி.எஸ்.பி., ரூபன்குமார், பி.டி.ஓ., சக்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றி தங்க பதக்கம் பெற்ற ஓட்டுனர்கள், 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வு நிலைப் பெற்ற ஓட்டுனர்கள் கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ராஜன், சக்திவேல், வின்சென்ட் ராஜன், பழனிசாமி, இளஞ்செழியன், ரவிச்சந்திரன், மணிமாறன், ரமேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, அருள்பிரகாசம் பங்கேற்றனர்.நிர்வாகி அப்பாசாமி நன்றி கூறினார்.