மேலும் செய்திகள்
நரிக்குடி மினாகுளத்தில் பள்ளி கட்டடம் சேதம்
12-Dec-2025
கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பத்தில் அரசு மாதிரி பள்ளி கட்டடம் திறப்பு விழா நடந்தது. கடலுார் மஞ்சக்குப்பத்தில் ரூ. 56.47 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளி கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து கடலுாரில் நடந்த விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் மேயர் சுந்தரி குத்துவிளக்கேற்றி, கட்டடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். விழாவில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, துணை மேயர் தாமரைச்செல்வன், சி.இ.ஓ., ரமேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்டக்கல்வி அலுவ லர்கள் இஸ்மாயில், மோகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Dec-2025