உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு

சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் மகாசுப்ரியா வரவேற்றார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பல் மருத்துவர் விமல் ஆனந்த் பங்கேற்றார். பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார் வாழ்த்திப் பேசினர். பள்ளி வேலை நாட்களில் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்கள், பள்ளி அளவில் நடந்த தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள், மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியை ஆனி பிரிசில்லா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை