உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.டி.சீயோன் பள்ளியில் பட்டமளிப்பு விழா

எஸ்.டி.சீயோன் பள்ளியில் பட்டமளிப்பு விழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் தலைமை தாங்கினர். மாவட்ட கவுன்சிலர் திருமாறன், அரசு வழக்கறிஞர் குணசேகரன், வீட்டு வசதி வாரிய கூட்டுறவு சங்க தலைவர் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றி, மழலையர்களுக்கு பட்டம், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். இறுதியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.தலைமை ஆசிரியர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ