கிராம சபை கூட்டம்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. தனி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜலட்சுமி, இயற்கை விவசாயி ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முத்து வரவேற்றார். வெய்யலுார் ஊராட்சியில் உள்ள பரிபூரணநத்தம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வெய்யலுார், பரிபூரணநத்தம், வெய்யலுார்சாவடி கிராம மக்கள் பங்கேற்றனர்.