மேலும் செய்திகள்
கிரிக்கெட் விளையாடியவர் சுருண்டு விழுந்து பலி
08-Oct-2024
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பேரன் இறந்த துக்கத்தில் பாட்டி நெஞ்சு வலியால் இறந்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூர் பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திரிசங்கு மகன் ரிஷி,15; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரிஷி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரது உடல், சொந்த ஊரான ஒ.பலாப்பட்டு கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ரிஷி உடலை பார்த்து கதறி அழுத அவரது பாட்டி, தெய்வானை,70; நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார். பேரன் இறந்த துக்கத்தில் பாட்டியும் உயிரிழந்த சம்பவம் பலாப்பட்டு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
08-Oct-2024