மேலும் செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை
13-Apr-2025
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு மகா குருபூஜை விழா நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமி சித்தருக்கு120வது மகா குருபூஜை விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், மகா அபிஷேகம் நடந்தது.11:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தருக்கு கலச அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
13-Apr-2025