குட்கா விற்பனை செய்தவர் கைது: 360 கிலோ பறிமுதல்
மந்தாரக்குப்பம்: அரசக்குழி பகுதியில் குட்கா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து 360 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 04:30 மணியளவில் அரசக்குழி டாஸ்மார்க் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்தவர்களை சந்தேகத்தில் பேரில் விசாரித்தனர். விசாரணையில் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த வீரசிங்கம் 39, என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்காக அப்பகுதியில் உள்ள கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து வீரசிங்கத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 360 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்