குட்கா விற்றவர் கைது
கிள்ளை : பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கிள்ளை, முழுக்குத்துறை சுனாமி நகர் பகுதி பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 12 ஹான்ஸ் பாக்கெட், 10 கூல் லிப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் அன்புகரசியை, 38; கைது செய்தனர்.