உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் குட்கா விற்பனை: ஒரே நாளில் 7 பேர் கைது

கடலுாரில் குட்கா விற்பனை: ஒரே நாளில் 7 பேர் கைது

கடலுார்: கடலுாரில் மெடிக்கல், மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்த வழக்கில் ஒரே நாளில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் புதுப்பாளையம் மீன் மார்க்கெட் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார், நேற்று காலை அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 32; மற்றும் சிவா, 35; ஆகியோர் மளிகை கடையில், குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து, இருவரையும் போலீசார் பிடித்து, அவர்களிடமிருந்த ஒரு லட்சம் மதிப்பிலான 50 கிலோ குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ரூபன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமார், சிவா ஆகியோரை கைது செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.பின், டி.எஸ்.பி., ரூபன்குமார் கூறுகையில், எஸ்.பி., உத்தரவுபடி, கடலுார் உட்கோட்ட பகுதியில் குட்கா தொடர்பாக குழு அமைத்து தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, புதுப்பாளையத்தில் சதீஷ்குமார், சிவா கைது செய்யப்பட்டனர். இதேபோன்று, திருப்பாதிரிப்புலியூரில் மெடிக்கலில் குட்கா பதுக்கி விற்பனை செய்த செம்மண்டலம் ஸ்ரீதர்துரை, 54; கே.என்., பேட்டை ஜெயபிரகாஷ் மனைவி சுகந்தி, 40; நெல்லிக்குப்பம் அப்துல் ரசீத், 50; ஆகியோரை கைது செய்து, ஒரு லட்சம் மதிப்பிலான 50 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.முதுநகர் போலீசார், புதுச்சேரி மாநிலம், கன்னிக்கோவிலை சேர்ந்த அப்பாதுரை, 56; மஞ்சக்குப்பம் இக்பால், 54; ஆகியோர் 50 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ குட்கா கடத்தியது தெரியவந்து கைது செய்யப்பட்டனர்.கடலுாரில் உள்ள மூன்று காவல் நிலையங்களில் ஒரே நாளில் குட்கா வழக்கில் 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 15, 2024 16:17

கைது கைதுன்னு சிரிப்பு மூட்டறாங்க. கொஞ்சநாளில் வெளியே வந்து தொழிலை தொடர்வார்கள். ரெண்டு ஏரை போட்டுத் தக்ளினா அடுத்தவன் அடங்குவான். முடியலியா? குட்காவை அனுமதிங்க. சாப்புட்டு சாவறவன் சாகட்டும். அரசுக்கு வரியாவது வரட்டும்.


புதிய வீடியோ