உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்

ரயிலில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்

கடலுார்: ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ. 19 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலுார் முதுநகர் ரயில் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் தலைமையிலான ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று (அக்.,24) சோதனை நடத்தினர். அப்போது, 3வது நடைமேடையில் நின்ற மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனை செய்த போது, கேட்பாரற்று கிடந்த மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 100 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதன் மதிப்பு 18 ஆயிரத்து 936 ரூபாய் ஆகும். புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அதனை கடத்தி வந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ