ரவுண்டானாவில் ைஹமாஸ் வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
பெண்ணாடம் பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலம்- திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேம்பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. அதனை தடுக்க பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் ைஹமாஸ் விளக்கு அமைக்கவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கி, விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. வாகன ஓட்டிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பெ.பொன்னேரி மேம்பால ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.