உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார பேரவை கூட்டம்

ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார பேரவை கூட்டம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், அமுதா முன்னிலைவகித்தனர். சுகாதார ஆய்வாளர் எட்வின் ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் முன்னாள் ஒன்றிய சேர்மன்முத்துபெருமாள் பேசினார். பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரியகோஷ்டி மற்றும் தெற்கு பிச்சாவரம் ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும். ஆபத்தான சுகாதார கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும். புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர்கள், பிரேம்குமார், சரண்ராஜ், செல்வதுரை, அன்பரசு, ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் அன்புராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ