உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்

குட்கா விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதிகளில் குட்கா பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.மந்தாரக்குப்பம் பகுதிகளில் புகையிலை தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டனர்.புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மந்தாரக்குப்பம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கெங்கைகொண்டான் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, அர்னால்டு ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி