உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனமழை எதிரொலி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

கனமழை எதிரொலி சந்தையில் வியாபாரம் பாதிப்பு

நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் வாரச்சந்தை மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியதால் வியாபாரம் பாதித்தது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, அதிகளவு கருவாடு விற்பனை செய்யப்படுகிறது. இதேப் போன்று, காய்கறிகள் விற்பனைக்காக 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கடைகள் ஏலத்தின் மூலமாக லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தும் அறநிலையத்துறையினர் சந்தை இடத்தில் எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக சந்தை சேறும் சகதியுமாக மாறியது. வியாபாரிகள் தார்பாய் பந்தல் அமைத்து வியாபாரம் செய்தனர். மழை காரணமாக வியாபாரம் பாதித்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !