உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹெல்மெட் விழிப்புணர்வு  பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு  பேரணி

பண்ருட்டி: பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் நிலையம் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.பைக் பேரணிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் வரவேற்றார். பண்ருட்டிஇன்ஸ்பெக்டர் வேலுமணி, போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன் தேவநாதன்,சண்முகராஜா முன்னிலை வகித்தனர், டி.எஸ்.பி.ராஜா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார்.போலீசார் பைக்கில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை