உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

நடுவீரப்பட்டு: பண்ருட்டியில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரபத்மநாபன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி போக்குவரத்து பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு, ராஜாஜி சாலை, கடலுார் சாலை வழியாக சென்றது. பொதுமக்களுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் முரளி, தேவநாதன், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை