மேலும் செய்திகள்
வீட்டில் தீ விபத்து உடைமைகள் நாசம்
18-Dec-2024
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த உடையார்குடி கீழ வீதியைச் சேர்ந்தவர் சாமியப்பன், 60; இவர் வசித்து வரும் மாடிவீட்டின் பக்கத்தில் சொந்தமான பழைய ஓட்டு வீடு உள்ளது. நேற்று மாலை ஓட்டு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
18-Dec-2024