உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கணவர் மாயம்:  மனைவி புகார்

 கணவர் மாயம்:  மனைவி புகார்

விருத்தாசலம்: மனைவி புகாரின் பேரில், மாயமான கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விருத்தாசலம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மகன் சூர்யா, 28; பஸ் நிலையம் முன் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கிருத்திகா, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 8ம் தேதி இரவு 10:30 மணியளவில், நண்பரை பார்க்க செல்வதாக கூறிச்சென்ற சூர்யா திரும்பி வரவில்லை. கிருத்திகா புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை